Jaffna Muslim: ஞானசாரருக்கு எதிராக 50 க்கும் மேற்பட்ட வழக்குகள்: பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக நாட்டின் பல்வேறு நீதிமன்றங்களிலும் சுமார் 50க்கும் ...
தஃவா என்பது வெறுமனே குர்ஆன், ஹதீஸைக் கொண்டு செய்யப்படுவதல்ல!
அதற்கு பொறுமை, ஆழ்ந்த புலமை, தெளிந்த ஞானம், வளர்ந்த முதிர்ச்சி, நிதானம், நடுநிலை, வார்த்தைகளைக் கையாளும் திறன், புண்படுத்தாப் பண்பு, கண்ணியம் காக்கும் குணம், உணர்வுகள்
சீண்டப்படாமல், இனங்கள் தூண்டிவிடப்படாமல், குணங்கள் சேதப்படுத்தப்படாமல் கருத்தேற்றும் ஆளுமை, எரிச்சல்படுத்தாத தோற்றம், உண்மை, நேர்மை, பொறுமை, வன்மை, வாய்மை, வாக்குத் தவறாமை, நோக்கு பிழையாமை, முகபாவம், போன்ற அனைத்து நற்குணங்களும் கொண்டவராக, தகுதியானவராக இருக்க வேண்டும்.
நபிகளாரை அல்லாஹ் குர்ஆனை வெளிப்படுத்த தேர்ந்தவரைப் பற்றிக் கூறும் போது " நீர் உயர் குணத்தின் உன்னத நிலையில் இருக்கிறீர்" என்று கூறுவதிலிருந்து அறியலாம்!
பாலர் பாடசாலையில் படிப்பிப்போர்கூட தகுதிகள் கொண்டோராகவே இருக்கின்றனர். தஃவா பணி மிக உயர்ந்தது. சமுதாயங்களின் அழிவோடு தொடர்பானது என்பது மிகுந்த அபாயத்தினை விளக்குவது.
அத்துமீறல்களும், சுத்துமாத்துகளும், சித்து விளையாட்டுக்களும், வெத்து வேட்டுக்களும், குத்திக் குதறல்களும் நீர்த்துப் போக வைத்துவிடும் தஃவாவை!
No comments:
Post a Comment