Jaffna Muslim: பொது பலசேனாவுக்காக குனூத் ஓதியவர்கள், உம்மாவின் அவ...: -முஹம்மது ராஜி- இப்போது நாடு இருக்கிற நிலையில் இப்படி ஒரு கவிதை தேவைதானா என்றான் தேசியவாதத்துக்கு எதிராக நான் எழுதிய கவிதைக்கு கருத்த...
நம்மில் அநேகர் மன இச்சையை மார்க்கமாக ஆக்கிக் கொண்டுள்ளனர்!
மார்க்கம் கூறிய வழியில் நடப்பதை விடுத்து, தமது செயற்பாடுகளுக்கு மார்க்கத்தில் ஆதாரம் தேடுகின்றனர்!
மார்க்கத்தில் தமது நிலை பற்றி சிந்திப்பவரோ, சுயமதிப்பீட்டைச் செய்பவரோ இல்லை!
அனைவரும் அடுத்தவனில் பிழை தேடுவதிலும், அவர்களை மனம் போனவாறு விமர்சிப்பதிலும், தூற்றுவதிலும், பட்டப் பெயர் சூட்டி, நையாண்டி பண்ணுவதிலும் தமது முழுச் சக்தியையும் செலவழிக்கிறார்கள்.
அதனைச் செய்து விட்டால் தாம் ஒரு உத்தம இஸ்லாமியனாக உள்ளோம் என்ற மாயையில் மூழ்கி உள்ளனர்.
சுய இலாபங்களுக்காக தேசியம், தேசியத் தலைமை, பிரதேசம் போன்ற சொற்களைத் தாராளமாகவே பேசி முஸ்லிம்களை எவ்வாறெல்லாம் கூறு போடலாமோ அவ்வாறெல்லாம் பிரித்தாளும் நரித்தனத்தில் மூழ்குகின்றனர்.
தேசபக்தி இருப்பது வரவேற்கப்படலாம், அதுவே மார்க்கத்தை விலையாக்குவதாக மாறிவிடக் கூடாது. நியாய, அநியாயங்களைத் தீர்மானிப்பதாக ஆகிவிடக் கூடாது.
மதவாதிகளும் அரசியல் வியாபாரிகளுக்கு சோரம் போய் விட்டார்கள். மார்க்கம் தேவைக்கேற்றபடி விளக்கப்படுகின்றது.
No comments:
Post a Comment